ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளரை நியமிக்க கோரி மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளரை நியமிக்க கோரி மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 12-ந்தேதி பள்ளியில் மதிய உணவுடன், முட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட 5-ம் வகுப்பு மாணவர்கள் 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் இல்லை. இதனால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையறிந்த மாணவர் சங்கத்தினர் நேற்று விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சத்துணவு அமைப்பாளர் இல்லாததால் இது போன்று சம்பவம் நடக்கிறது. எனவே உடனடியாக சத்துணவு அமைப்பாளரை நியமிக்க வேண்டும். தரமான சத்துணவு, முட்டை வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன், விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சத்துணவு அமைப்பாளர் நியமிக்கப்படும், அதுவரை பொறுப்பு சத்துணவு அமைப்பாளர் பணியாற்றுவார் என கூறியதை அடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story