புதுவை பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு: துணைவேந்தரிடம் அரசியல் கட்சியினர் மனு


புதுவை பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு: துணைவேந்தரிடம் அரசியல் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:15 AM IST (Updated: 16 Oct 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி துணைவேந்தரிடம் அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.

புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், கம்யூனிஸ்டு எம்.எல். கட்சி செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரியிருந்தனர். மேலும் இடஒதுக்கீடு தொடர்பாக அவரிடம் வலியுறுத்தினார்கள்.

அவர்களிடம் புதுவை பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று தான் கூறவில்லை என்று துணைவேந்தர் மறுத்துள்ளார். இடஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள மனுவும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதுவை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வந்தால் உடனடியாக புதுச்சேரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story