வாணி ஒட்டில் அணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வாணி ஒட்டில் அணை கட்ட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வாணி ஒட்டில் அணை கட்ட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் தோப்பையகவுண்டர், வண்ணப்பா, சுப்பிரமணிரெட்டி, நசீர்அகமத், முனிராஜ், பெருமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வாணி ஒட்டில் அணை கட்ட சர்வே செய்வதை வேகப்படுத்திட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தென்பெண்ணை ஆற்றுநீர் கால்வாய் அமைத்து வழங்க வேண்டும். மேடான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு மின்மோட்டார் மூலம் நீர் ஏற்றி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். ஆழியாளம் அணைகட்டுகளில் இருந்து ராயக்கோட்டை, கெலமங்கலம், பைரமங்கலம், பேரிகை, வேப்பனப்பள்ளி ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து நீர்நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கடலரசுமூர்த்தி, மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜெயராமன், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் ரகுநாத், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் தமிழக விவசாய சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story