தாரமங்கலம் அருகே: சிறுமி கற்பழிப்பு; வாலிபர் கைது


தாரமங்கலம் அருகே: சிறுமி கற்பழிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2018 3:15 AM IST (Updated: 16 Oct 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே 17 வயது சிறுமியை பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓமலூர், 


ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த சிறுமி 13-ந் தேதி அதிகாலை அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது பெற்றோர், அந்த சிறுமியிடம் கேட்ட போது, துட்டம்பட்டி ரோன்கொட்டாய் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மகன் கதிர்வேல்(23) தன்னை கடத்தி சென்று அருகில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வைத்து கற்பழித்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமியை கடத்தி சென்று பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் கதிர்வேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று அடைத்து வைத்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story