மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை மின்னல் தாக்கி 2 பேர் படுகாயம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை மின்னல் தாக்கி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:30 AM IST (Updated: 16 Oct 2018 8:01 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேறறு மாலை பலத்த மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மின்னல் தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று மதியம் முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 3.15 மணியளவில் பலத்த இடி–மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தடுப்பை தாண்டி தண்ணீர் கொட்டியது. அதேபோன்று ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இதனால் அருவிகளில் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அருவிகளில் குளிக்க வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மின்னல் தாக்கியது 

தொடர்ந்து மாலை 4.15 மணி வரை ஒரு மணி நேரம் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, ஆய்க்குடியை அடுத்து உள்ள கம்பளியை சேர்ந்த முருகன்(வயது27), ஆனந்த்(70) ஆகியோர் மழைக்காக ஆய்க்குடி பஸ்ஸ்டாண்டு அருகில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில் அந்த 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த 3 ஆடுகள் மின்னல் தாக்கி பலியாகின. அந்த ஆடுகள் யாருக்கு சொந்தமானவை என உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story