மாவட்ட செய்திகள்

முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Students demonstrated in front of college campus in Musiri

முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்

முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்
முசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி,

முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விடுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.


இது குறித்து மாணவிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மாணவிகள் நேற்று விடுதி முன்பாக காலிக்குடங்களுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாணவிகள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் ராஜ்குமார், முசிறி தாசில்தார் சுப்ரமணியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விடுதிக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சூரத் தீ விபத்து; உயிரிழந்த 20 பேரில் 3 மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
குஜராத்தின் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரில் 3 மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் இன்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2. அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
3. செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்.
5. கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடை பிடித்தபடி நூதன ஆர்ப்பாட்டம் முதியவர் தீக்குளிக்க முன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடைபிடித்தபடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.