அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை; அருப்புக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை; அருப்புக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 1:36 AM IST (Updated: 17 Oct 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டணை விதித்து அருப்புக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்த வேலு என்பவரது மகன் ஜெயக்குமார் (வயது29). இவர் கடந்த 2009–ம் ஆண்டு 18½ பவுன் நகையுடன் இரு சக்கர வாகனத்தில் சொக்கனேந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த முருகன் (35) என்பவர் அவரை வழிமறித்தார்.

 பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளைக்காட்டி மிரட்டி நகையையும் செல்போனையும் பறித்துக்கொண்டு ஓடி விட்டார். போலீசார் முருகனை கைது செய்து அருப்புக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 வழக்கை நீதிபதி வசித்குமார் விசாரித்து முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்புக்கூறினார்.


Next Story