சோலார் சார்ஜர்


சோலார் சார்ஜர்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:45 AM IST (Updated: 17 Oct 2018 10:45 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு உலகத்தில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் இவை அனைத்துமே மனிதனின் அத்தியாவசிய தேவைகளாகிவிட்டன.

தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இருந்த ஸ்மார்ட்போன் இப்போது அனைத்து வகையான செயல்பாடுகளையும் நிறைவேற்றும் வகையில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் எங்கிருந்தாலும், எதையும் செயல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆனாலும் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீர்ந்து போகும்போது அதை சார்ஜ் செய்வதற்கு சிரமபட வேண்டியிருக்கிறது.

கையில் எடுத்துச் செல்லும் பவர் பேங்கும் சில சமயங்களில் காலை வாரிவிடும். இந்தக் குறைகளைப் போக்கவே டிஸோல் (Dizaul) சோலார் சார்ஜர் வந்துள்ளது. இது கையிலெடுத்துச் செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. சாவிக்கொத்தில் மாட்டிச் செல்லலாம். மலையேற்ற வீரர்கள், நீண்ட தொலைவு பயணிப்பவர்கள் தங்களின் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்ய இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இதில் 5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டேப்லெட் உள்ளிட்டவற்றையும் சார்ஜ் ஏற்றலாம். கோ புரோ கேமராவுக்கும் இதிலிருந்து சார்ஜ் செய்ய முடியும். இது முற்றிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் ரப்பர் மற்றும் ஏ.பி.எஸ்., பி.சி. போன்றவையே பயன்படுத்தப்பட்டுள்ளன. கையிலிருந்து எளிதில் வழுக்கி விழாத வகையிலான வடிவமைப்பு கொண்டது. இதன் மீது மழைத்துளி படிந்தாலும் இது செயல்படும். இதில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்கள் ரப்பர் மூடியால் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் தண்ணீர் உள்புகுவது தடுக்கப்படுகிறது.

5 வோல்ட் திறனில் சார்ஜ் ஏற்றும் அனைத்து மின்னணு கருவிகளையும் இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். கையில் எடுத்துச் செல்லும் வகையில் 150 கிராம் எடை கொண்டதாக வந்துள்ளது. இதன் விலை ரூ. 4,080 ஆகும்.

Next Story