எ.பி. ஸ்மார்ட் இஸ்திரி சாதனம்


எ.பி. ஸ்மார்ட் இஸ்திரி சாதனம்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:51 AM IST (Updated: 17 Oct 2018 10:51 AM IST)
t-max-icont-min-icon

துணிகளை துவைத்து, உலர்த்தி, இஸ்திரி போடுவது இல்லத்தரசிகளுக்கு மிகவும் கடினமான வேலை. எ.பி. என்ற இந்த புதிய சாதனம் நமது துணியை காயவைப்பதோடு இஸ்திரியும் போட்டு விடுகிறது.

வாஷிங் மெஷினிலோ அல்லது கைகளிலோ துவைத்த துணியை இதனுள் ஹேங்கரில் தொங்கவிட்டால் அழகாக உலர வைத்து இஸ்திரியும் போட்டு விடும். ஒரே நேரத்தில் 12 துணிகளை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள ஹேங்கர்களில் தொங்க விடலாம். இதனை இன்ஸ்டால் செய்வதற்கு வெளி நபரை அணுக தேவை இல்லை. சுலப முறையில் நாமே செய்யலாம். அறையின் ஓர் மூலையில் இடத்தை அடைக்காமல் சமர்த்தாக உட்கார்ந்து கொள்ளும்.

நீராவியின் வெப்பத்தை கொண்டு இது செயல்படுகிறது. எனவே துணிகளுக்கு எந்த பாதிப்பும் நேரிடாமல் இருக்கும். பட்டு போன்ற மென்மையான துணிகளை ஒரு உரையில் போட்டு இதில் பயமின்றி உலர்த்தலாம். துணிகளை உள்ளே தொங்க விட்ட பின்னர் ஸ்டார்ட் கொடுக்க வேண்டியது தான். மற்றதை எ.பி. பார்த்துக் கொள்ளும். சட்டை காலர்களில் டச்அப் செய்வதற்கு ஒரு சிறிய கருவியும் தருகின்றனர்.அதை வைத்து லேசாய் அழுத்தி எடுத்தால் காலர் உலர்ந்து ரெடியாகிவிடும். துணிகளுக்கு நறுமணம் கொடுக்கவும் மணமூட்டிகளை இணைப்பாக தருகின்றனர்.

நீராவியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை போன்றே இந்த மெஷினின் அடியில் நீரை நிரப்பி விட வேண்டும். வேலை முடிந்தவுடன் அலாரம் அடித்து தெரிவிக்கும். இன்றைய மற்ற ஸ்மார்ட் சாதனங்களை போல இதையும் ஆப் துணை கொண்டு நமது போனுடன் இணைத்துக் கொள்ள முடியும். வேலை முடிந்தவுடன் போனுக்கு அலெர்ட் செய்து விடும்.

Next Story