மாவட்ட செய்திகள்

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு + "||" + In Arumuganeri Collector's sudden analysis of student hostels

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

ஆறுமுகநேரி திசைகாவல் வடக்கு தெருவில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி உள்ளது. இங்கு நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு மாணவிகளுக்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவினை ஆய்வு செய்தார். பின்னர் அவர், விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும். அது வரையில் தற்காலிகமாக மாற்று கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பட ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி

பின்னர் ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைப்பாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. புயல் பாதிப்பை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
2. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சத்தில் வினோத காட்சி அரங்கம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வினோத காட்சி அரங்கை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.
3. அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
4. மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை: புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
5. கழிவறைக்குள் பூட்டப்பட்ட மாணவி 2 மணி நேரம் தவிப்பு: பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மாணவியை உள்ளே வைத்து பூட்டிய நிலையில் பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.