மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல் + "||" + BSNL Offers to customers General manager information

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வாடிக்கையாளர்களுக்கு சலுகை

பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை சலுகையாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், வீடியோ கால்கள், டேட்டா கொண்ட எஸ்.டி.வி. 78– ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்துபவர்களுக்கு 10 நாட்கள் வேலிடிட்டியுடன் ரியல் அளவற்ற வாய்ஸ் கால்களுடன் அளவற்ற வீடியோ கால்களும், தினமும் அளவற்ற 3ஜி டேட்டா 2 ஜி.பி.க்கு பிறகு 80 கே.பி.பி.எஸ். வேகத்திலும் கிடைக்கும்

தென்காசி கோட்டத்தில் நல்லூர் மற்றும் மத்தளம்பாறை பகுதிகளில் பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தினமும் பிராட்பேண்ட் மூலமாக 5ஜிபி அளவற்ற டேட்டா மற்றும் 24 மணி நேர அளவற்ற கால்கள் நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. பிபிஜி கோம்போ யு.எல்.டி. 150 ஜிபி பிளானில் (ரூ.199+ ஜி.எஸ்.டி.ஸ்ரீ 20 எம்.பி.பி.எஸ். வரையிலான வேகத்தில் தினமும் 5ஜிபி டேட்டாவும், அதற்கு பின்னர் ஒரு எம்.பி.பி.எஸ். வரையிலான வேகத்தில் அளவற்ற டேட்டாவும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 24 மணி நேர அளவற்ற கால்களும் கிடைக்கும். இத்திட்டம் இணைப்பு பெற்ற 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

மெகா மேளா

பி.எஸ்.என்.எல். சலுகைகளை பெறுவதற்காக இன்றும் (வியாழக்கிழமை) மற்றும் 24–ந் தேதிகளில் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளாக்களை நடத்துகிறது. வருகிற 20–ந் தேதி பாளையங்கோட்டை அன்புநகர், 22–ந் தேதி சங்கரன்கோவில், 23–ந் தேதி வடக்கன்குளம், 25–ந் தேதி மேலப்பாளையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, 26–ந் தேதி சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை ஆகிய தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளாக்களை நடத்துகிறது. பொதுமக்கள் இந்த மேளாக்களில் மறுஇணைப்புகள், புதிய தரைவழி, பிராட்பேண்ட், எப்.டி.டி.எச். இணைப்புகள் மற்றும் 3ஜி செல்போன் இணைப்புகள், எம்.என்.பி. இணைப்புகள் (நம்பரை வேறு நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.–க்கு மாற்றிக் கொள்வது) பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.