மாமண்டூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
மாமண்டூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையோரம் அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. சிலைகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து 100 அடி உயர கழக கொடியை ஏற்றிவைத்து ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்தையும் திறந்துவைத்தார்.
மதுராந்தகம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோ.அப்பாதுரை தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட அவைத்தலைவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தண்டரை கே.மனோகரன், வி.எஸ்.ராஜி, கனிதா சம்பத் மதுராந்தகம் நகர செயலாளர் ரவி, மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் யஸ்வந்த்ராவ், மாட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜி.எஸ்.டி சாலை ஓரமாக 100 அடி உயர கொடி கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். மறைமலைநகர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஜி.கே.கோபிகண்ணன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பென்ஜமின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமலைநகர் 7–வது வார்டு செயலாளர் எம்.ஜி.கே.பாரதிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி பஸ்நிலையம் அருகே 100 அடி உயர அ.தி.மு.க. கொடியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார். கல்வெட்டு திறப்புவிழாவும் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளர் சந்தானகிருஷ்ணன். கிளைசெயலாளர்கள் திருத்தேரி ராஜேந்திரன், எழில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செட்டிபுண்ணியம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திராசிட்டியில் நடந்தகொடியேற்று விழாவில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அமுதாகுணசேகரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கி துணைதலைவர் சி.ஆர்.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரனூர் பஸ் நிலையம் அருகே நடந்த விழாவில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலப்பாக்கம் ஊராட்சி செங்கல்பட்டு கோர்ட்டு அருகே நடந்த விழாவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியசெயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும் மேலேரிபாக்கம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான கே.சல்குரு முன்னிலை வகித்தார். கிளைசெயலாளர்கள் விஜயபாபு, சேகர், நியமத்துல்லா, ராஜா, புருஷோத்தமன், கொண்டைவேலு, கோதண்டன், ரவிகுமார், வேலு.கோவிந்தராஜ், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.