தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் சாவு


தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Oct 2018 3:00 AM IST (Updated: 18 Oct 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள விளக்கூர் பழையகாலனி முதல்தெருவை சேர்ந்தவர் வடிவேல் மகன் அய்யப்பன்(வயது 22), கொத்தனார். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம்- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று அய்யப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யப்பனின் அண்ணன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் நடேசன்(65). இவர் நேற்று காலை தனது சைக்கிளில் மூங்கில்துறைப்பட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நடேசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story