திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் பெண்கள் உள்பட 65 பேர் கைது
திருவாரூரில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
பொது வினியோகத்திட்டத்திற்கு தனி துறை உருவாக்கிட வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன் முறை செய்யாத பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்திட வேண்டும். ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எடை போட்டு வழங்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். போராட்டத்தில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் கிராமப்புறங்களில் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கான தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story