முத்துப்பேட்டை பேரூராட்சியில் வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டையில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஜகபர்அலி தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெட்ரோமாலிக் வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் துரைவேலன் பேசினார்.
கூட்டத்தில் முத்துப்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அதற்காக அப்போது நகராட்சிக்குரிய வரி உயர்த்தப்பட்டது. ஆனால் இன்று வரை நகராட்சியாக மாறாத நிலையில் அந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் வரி சீராய்வு என்ற பேரில் முத்துப்பேட்டையில் மீண்டும் வரி உயர்வை ஏற்படுத்தும் விதமாக அதற்கான பணியில் பேரூராட்சி சார்பில் ஈடுபட்டு வருவதை இந்த கூட்டம் கண்டிக்கிறது. மேலும் இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் சமூக ஆர்வலர் முகமதுமாலிக், மாவட்ட அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, நகர துணைத்தலைவர்கள் வேல்முருகன், குலாம்ரசூல், பொருளாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story