கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வாய்மேடு அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீரை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு,
வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் உள்ள வடமழை, மணக்காடு, செட்டிப்புலம், செண்பகராயநல்லூர், கத்தரிப்புலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் நிலத்தடி நீர் உப்புதன்மை ஏற்பட்டதால், குடிநீருக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை நம்பி உள்ளனர். இந்த நிலையில் வாய்மேட்டை அடுத்த செங்காத்தலை பாலம் அருகே வேதாரண்யம் பகுதிகளுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் குடிநீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே வாய்மேடு அருகே கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story