முயல் தீவில் பவளப்பாறைகள் பற்றி ஆய்வு


முயல் தீவில் பவளப்பாறைகள் பற்றி ஆய்வு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:00 AM IST (Updated: 18 Oct 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

முயல் தீவில் பவளப்பாறைகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

பனைக்குளம்,

மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள முயல்தீவு கடல் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்துள்ளதா, பவளப் பாறைகளின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த ஆய்வு மத்திய கடல் வளஆராய்ச்சி மையம் சார்பில் தொடங்கி உள்ளது.

மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார்,உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கடல் வள ஆராய்ச்சியார் சண்முகராஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து முயல் தீவில் கடலின் அடியில் உள்ள பவளப்பாறைகளை ஜி.பி.எஸ்.கருவி உதவியுடன் பளவப் பாறைகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி மண்டபம் வனச்சரகர் சதிஷ் கூறியதாவது:–

மன்னார் வளைகுடா பகுதியான தீவு பகுதிகளை சுற்றிலும் உள்ள பவளப்பாறை களின் வளர்ச்சி குறித்தும்,அதன் புள்ளி விவரங்கள் குறித்தும் கடல்வளஆராய்ச்சி மையம் சார்பாக 21 தீவுகளிலும் உள்ள பவளப் பாறைகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

முயல் தீவு பகுதியில் பவளப் பாறைகளை ஆய்வு செய்ததில் 60 சதவீதம் 70 சதவீதம் வரை பவளப்பாறைகள் நன்கு வளர்ச்சியடைந்து உள்ளன. ஒவ்வொரு தீவு பகுதியிலும் 1 வாரம் வரை இந்த ஆய்வு நடைபெறும்.

மேலும் தீவை சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் பளவப்பாறைகள் இல்லாத இடங்களில் பவளப் பாறைகள் வளர சிலாப்புகள் செய்து அந்த சிலாப்புகளில் பவளப்பாறைகளை கட்டி வைத்து விடுவோம்.இது போன்று வைக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் பவளப்பாறைகள் வளரத் தொடங்கி விடும்.

தீவுகளை சுற்றிலும் கிளைவடிவம்,மூளை வடிவம்,விரல்,மலைவடிவம் என பல வகையான பவளப்பாறைகள் உள்ளன.16 ஆண்டுகளுக்கு பிறகு தீவு பகுதிகளில் பவளப் பாறைகளின் வளர்ச்சி,பாதிப்பு குறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது.மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பவளப்பாறைகள் முக்கிய காரணியாக உள்ளது. எனவே பவளப் பாறைகள் சேதமாகாமல் பாதுகாக்க நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறைகளில் உள்ள பகுதியில் கண்டிப்பாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story