மாவட்ட செய்திகள்

வருகிற 24–ந் தேதி அரசு விழா; மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு + "||" + Sub-collector survey of the Marudapandyar Memorial Hall

வருகிற 24–ந் தேதி அரசு விழா; மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு

வருகிற 24–ந் தேதி அரசு விழா; மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு
வருகிற 24–ந்தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக நடைபெறுவதையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மணி மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

சுதந்திர போராட்டத்தில் மருதுபாண்டியர்களை வெள்ளையர்கள் கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24–ந்தேதி திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் அரசு விழாவாகவும், காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவு இடத்தில் அக்டோபர் 27–ந்தேதி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு வருகிற 24–ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது மணி மண்டபம் மற்றும் பஸ் நிலையத்தில் அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் ஆகியவற்றை நேற்று சப்–கலெகடர் ஆஷாஅஜீத் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மணிமண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடம் ஆகியவைகள் வர்ணம் பூசப்பட்டு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணியையும் சப்–கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்பத்தூரில் பட்டாசு கடைகளுககு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெகடர் கீதா, தாசில்தார் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கத்துரை, வருவாய் ஆய்வாளர் பழனிககுமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் எச்சரிக்கை தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், 39 தாழ்வான பகுதிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
2. அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இந்து மக்கள் கட்சி மனு
தமிழகத்தில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
3. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தேசிய விருது பெற்ற அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு
தேசிய அளவிலான சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவிற்கு விருதினை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
5. திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து தர்ணா கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.