டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:00 AM IST (Updated: 18 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டத்தில் தினம் ஒரு கிராம வாரியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று பார்ப்பனச்சேரி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, கொக்கிப்புழு ஒழிப்பு பணி பற்றிய விழிப்புணர்வு மற்றும் தொற்றுநீக்கப் பணிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சுகாதார துணை இயக்குனர் ஹேமந்த்சந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அருள்பிரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story