மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டையில்: ரூ.12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் + "||" + In Namagiripettai: Rs 12 lakh Yellow auctions

நாமகிரிப்பேட்டையில்: ரூ.12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில்: ரூ.12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 252 மூட்டைகள் மஞ்சள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் போனது.
ராசிபுரம், 

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்திற்கு விரலி ரகம் 160 மூட்டைகளும், உருண்டை ரகம் 90 மூட்டைகளும், பனங்காலி 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,702 முதல் அதிகபட்சமாக ரூ.7,579-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6,009 முதல் அதிகபட்சமாக ரூ.6,992-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.9,712 முதல் அதிகபட்சமாக ரூ.10,212-க்கும் ஏலம் விடப்பட்டது.

இந்த வாரம் நடந்த ஏலத்தில் 252 மஞ்சள் மூட்டைகள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் விரலி மற்றும் உருண்டை ரகம் மஞ்சள் விலை குறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் பனங்காலி ரகம் சற்று விலை கூடுதலாக ஏலம் விடப்பட்டது. மஞ்சள் விலை குறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.