மாவட்ட செய்திகள்

நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு + "||" + Collector orders the authorities to remove pigs from municipal areas

நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள மச்சுவாடி, அண்டக்குளம் சாலையில் உள்ள தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு காரணிகள் ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது கொசு மருந்தும் அடிக்கும் பணி, தூய்மை பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நகராட்சி பகுதிகளில் தினமும் காலை மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.


தொடர்ந்து கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வின்போது டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் கண்டறியப்பட்டதால், அபராதம் விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் டெங்கு கொசு ஒழிப்பு காரணிகள் கண்டறியப்படால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்றார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் எச்சரிக்கை தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், 39 தாழ்வான பகுதிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
2. அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இந்து மக்கள் கட்சி மனு
தமிழகத்தில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
3. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தேசிய விருது பெற்ற அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு
தேசிய அளவிலான சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவிற்கு விருதினை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
5. திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து தர்ணா கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.