அ.தி.மு.க.வின் ஆண்டுவிழா கொண்டாட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவினையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி,
உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று அ.தி.மு.க.வின் 47–வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து கட்சிக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. அதன்பின் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story