அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:45 AM IST (Updated: 18 Oct 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்,

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத்தினர் காரைக்கால் சிங்காரவேலர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். செயலர் ரவிச்சந்திரன், ஆலோசகர் வீரப்பிள்ளை, பொறுப்பு செயலர் குமரன், உதவித்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன், கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெயசிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும். மாத ஊதியம் நிலுவையின்றி வழங்கவேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் ரெயிலடி அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து சிங்காரவேலர் சிலையை அடைந்தனர்.

Next Story