திருச்சி மாவட்ட ‘ஆவின்’ தலைவராக கார்த்திகேயன் பதவி ஏற்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து
திருச்சி மாவட்ட ‘ஆவின்’ தலைவராக கார்த்திகேயன் பதவி ஏற்றார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாழ்த்தினர்.
திருச்சி,
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் 4 மாவட்டங்களில் இருந்து 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சி கொட்டப்பட்டுவில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகத்தில் தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கான தேர்தல் நடந்தது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளரான சி.கார்த்திகேயன் தலைவராகவும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த தங்க.பிச்சைமுத்து துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருச்சி ஆவின் அலுவலகத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. வரவேற்றார். அதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் ஆவின் தலைவராக சி.கார்த்திகேயன் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து துணைத்தலைவராக தங்க.பிச்சைமுத்து, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக கோவிந்தராஜூ(கல்லடிப்பட்டி), செல்வராஜ்(மணப்பாறை), ஆராய்ச்சி குமரவேல்(முசிறி), சுப்பிரமணி(கரூர் சுக்காலியூர்), சுப்பிரமணியன்(மேலபஞ்சப்பட்டி), செல்வராசு(பெரம்பலூர் வேப்பந்தட்டை), குணசீலன்(குன்னம்), சரஸ்வதி(முசிறி மங்கலம்), லட்சுமி(துறையூர் கலிங்கமுடையான்பட்டி), தேவி(அத்திப்பாளையம்),
தாமரைச்செல்வி( பெரம்பலூர் திருப்பெயர்), தனசங்கு(அரியலூர் வெளிபிரிங்கியம்), நாகராஜன்(ஆலத்துடையான்பட்டி),
சகுந்தலா(வைத்தியநாதபுரம்), தங்கையன்(தழுதாழைமேடு) ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர்.
பின்னர் புதிய ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்பு விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், திருச்சி ‘ஆவின்’ நிர்வாக இயக்குனர் சுப்பு, துணைப்பதிவாளர் கிறிஸ்துதாஸ், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் எம்.சிவசுப்பிரமணியன், கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பிச்சைபிள்ளை மற்றும் நிர்வாகிகள் சி.கண்ணன், வி.விக்டர், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story