30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் சாலை மறியல் : 150 பேர் கைது
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
ஓய்வூதியம், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நியாய விலைக்கடை பணியாளர் களுக்கும் வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட் களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடந்த 15-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் மாவட்டத் தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நியாய விலைக்கடை பணியாளர் களின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. பணியாளர்கள் நேற்று காலை யில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட னர். பின்னர் அவர்கள் மாநில பொதுச்செயலாளர் ஜெயச் சந்திரராஜா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட தலைவர் கருப் பையா, மாநில துணை தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் தங்கராசு, மாவட்ட துணை தலைவர் முத்துபாபு, அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் சரவணன், மாநில அமைப்பு செயலாளர் சீனுவாசன், முன்னாள் மாவட்ட செய லாளர் ராசாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் பழைய கலெக்டர் அலுவலக சாலையை அடைத்தபடி கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த புதுநகர் போலீசார், மறியலில் ஈடுபட்ட தாக கூறி முக்கிய நிர்வாகிகளை மட்டும் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர் களை நடந்து வருமாறு கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பணியாளர்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட் டனர். இதையடுத்து அவர்களும் கைது செய்யப் பட்டனர். 40 பெண்கள் உள்பட மொத்தம் 150 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புதுப்பாளை யத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.
Related Tags :
Next Story