ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஒரு வயது குழந்தை அனுமதி
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஒரு வயது குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 2 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேர் இந்த நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர்.
காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சல், இருமல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற வருகிறவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரிசோதனை செய்யப்படுகிறது. அதுபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் வந்தால் அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு காரணமாக அந்த குழந்தைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்குள்ள தனி வார்டில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அந்த குழந்தையின் ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story