அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு


அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 11:29 PM GMT (Updated: 17 Oct 2018 11:29 PM GMT)

அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மரியாதை செலுத்தினார்.

ஆரணி,

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஆரணி தொகுதி அ.தி.மு.க.சார்பில் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர் தலைமையில் விழா நடந்தது. இதனையொட்டி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அதே பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதன்பின்னர் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று காந்தி ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்துக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சேவூர் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத் தலைமையில் மாலை அணிவிக்கப்பட் டது. வெள்ளேரி, எஸ்.வி.நகரம், அக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் பாரி பி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், மேற்கு ஆரணிஒன்றிய செயலாளர் அரையாளம் எம்.வேலு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story