ரிபாத்தின் கிரிக்கெட் மட்டை


ரிபாத்தின் கிரிக்கெட் மட்டை
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 AM IST (Updated: 19 Oct 2018 8:16 AM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் விளையாட்டிற்கு மவுசு கூடி இருக்கிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் கிரிக்கெட் மட்டையை தூக்கிக்கொண்டு குழுவாக சென்று விளையாடுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு மவுசு கூடி இருக்கிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் கிரிக்கெட் மட்டையை தூக்கிக்கொண்டு குழுவாக சென்று விளையாடுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் கிரிக்கெட் மட்டைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் மட்டைகளை தயாரிக்கும் பணியில் பெண் ஒருவரும் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய பெயர் ரிபாத் மசோதி. காஷ்மீர் மாநிலத்திலுள்ள நர்வாரா பகுதியை சேர்ந்தவர். இவருடைய மாமனார் 1970-ம் ஆண்டு கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. 1990-ம் ஆண்டில் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அதன் பிறகு இவர்களுடைய கிரிக்கெட் மட்டைகளுக்கு மவுசு குறைய தொடங்கியிருக்கிறது.

கிரிக்கெட் மட்டைகள் தயாரிப்பு தொழில்தான் குடும்ப வருமானத்துக்கு வழிவகை செய்து கொண்டிருந்ததால் ரிபாத் மீண்டும் அதனை கையில் எடுக்க தொடங்கிவிட்டார். 1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். காஷ்மீரில் புகழ் பெற்ற வில்லோ மர பாகங்களில் இருந்து கிரிக்கெட் மட்டைகளை உருவாக்குகிறார். அவை வலிமையாகவும் எடை குறைவானதாகவும் இருக்கின்றன. மற்ற மூலப்பொருட்களை வேறு மாநிலங்களில் இருந்து வரவழைத்து கிரிக்கெட் மட்டைகளை அழகுபடுத்துகிறார். இவருடன் மட்டைகள் உருவாக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 1500 மட்டைகளை தயாரிக்கிறார்கள்.

ரிபாத், கிரிக்கெட் மட்டைகள் மட்டுமின்றி பெண்களை ஈர்க்கும் விதத்தில் டென்னிஸ் மட்டைகளையும் உருவாக்குகிறார். ‘‘கிரிக்கெட் மட்டைகளை விற்பனை செய்யும் பணி சவாலானது. மும்பையைதான் எங்களுக்கான வணிக சந்தையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். மக்கள் எங்கள் தயாரிப்பை விரும்பி வாங்குகிறார்கள்’’ என்கிறார்.

Next Story