நடிகை தனுஸ்ரீதத்தாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது - நடிகர் சங்கத்துக்கு நானா படேகர் விளக்கம்
நடிகை தனுஸ்ரீதத்தாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என நடிகர் சங்கத்தில் நானா படேகர் விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை,
இந்தியாவில் ‘‘மீ டு'' இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் நடிகை தனுஸ்ரீதத்தா, நடிகர் நானா படேகர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ‘‘ஹான் ஒகே பிளீஸ்’’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீதத்தா கூறியிருந்தார்.
இந்த புகார் இந்திப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகையின் புகார் தொடர்பாக சினிமா மற்றும் டி.வி. நடிகர் சங்கம் நானா படேகரிடம் விளக்கம் கேட்டு இருந்தது.
இந்தநிலையில் நானா படேகர் நடிகை தனுஸ்ரீதத்தாவின் புகார் குறித்து நடிகர் சங்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக நானா படேகரின் வக்கீல் அனிகேத் நிகம் அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகை தனுஸ்ரீதத்தாவின் தவறான குற்றச்சாட்டு நானா படேகரின் புகழை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு சிதைத்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தெரிவிக்கப்படும் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நடிகர் சங்கம் விசாரிக்க கூடாது. நானா படேகர் மீது அவதூறு பரப்பிய நடிகை தனுஸ்ரீதத்தா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story