ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை பகுதிகளை சேர்ந்த நாங்கள் மலைவாழ் மக்களுக்கான சான்றிதழ்களை பெற்று பயன் அடைந்து வந்தோம். ஆனால் தற்போது விதிமுறைகளை மீறி மலைவாழ் மக்கள் அல்லாதோருக்கு திருத்தணி ஆர்.டி.ஓ. மலைவாழ் மக்களுக்கான சான்றிதழை வழங்கி உள்ளார். இதனால் உண்மையான மலைவாழ் மக்களான நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்கள் அல்லாதோருக்கு வழங்கப்பட்ட 300 சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Related Tags :
Next Story