காஞ்சீபுரத்தில் பணம், செல்போன் பறிப்பு; 2 பேர் கைது


காஞ்சீபுரத்தில் பணம், செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2018 3:39 AM IST (Updated: 20 Oct 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பணம், செல்போன் போன்றவற்றை பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ரெட்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராமன்மகேஸ்வர் (வயது 27). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காஞ்சீபுரத்தில் இருந்து சைக்கிளில் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து சைக்கிளில் வந்தவரை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், பணம் மற்றும் அவரிடம் இருந்த இனிப்புகள், பழங்கள் போன்றவற்றை பறித்துகொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து ராமன்மகேஸ்வர் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்.

இதற்கிடையில், அவர்கள் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர் போலீசாரை கண்டதும் அவர்கள் விழித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு அவர்களை பிடித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை செய்தார். விசாரணையில் ராமன்மகேஸ்வரிடம் கத்திமுனையில் செல்போன், பணம் போன்றவற்றை அவர்கள் பறித்து சென்றது தெரியவந்தது.

இதையொட்டி வழிப்பறியில் ஈடுபட்ட காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்த மாணிக்கம் (வயது 25), நடராஜ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story