மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது + "||" + Clash of the pub The worker was strangled by beer bottle Young man arrested

மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வில்லியனூர் அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் கணுவாப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 31), செங்கல் சூளை தொழிலாளி. இவர் வில்லியனூர் கோட்டைமேட்டில் உள்ள மதுக்கடைக்கு குடிக்க சென்றார். அங்கு கணுவாப்பேட்டை பொறையாத்தமன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாசும் (29) மது குடித்தார். குடிபோதையில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து லட்சுமணனை தாக்கினார். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலைய்யன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கவுந்தப்பாடி அருகே வேனில் மணல் கடத்திய 2 பேர் கைது தப்பி ஓடிய ஒருவருக்கு வலைவீச்சு
கவுந்தப்பாடி அருகே வேனில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது
வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்து இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
4. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் - தொழிலதிபர் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார்.
5. கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி செம்பு கம்பி கொள்ளை : 6 பேர் கும்பல் கைது
நவிமும்பையில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி மதிப்பிலான செம்பு கம்பிகளை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.