போரூர் சுங்கச்சாவடி அருகே அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி


போரூர் சுங்கச்சாவடி அருகே அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 20 Oct 2018 9:31 PM IST)
t-max-icont-min-icon

போரூர் சுங்கச்சாவடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர், 6–வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார், தாம்பரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் தஞ்சாவூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக தினேஷ்குமார் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தினேஷ்குமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தினேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் சுரேஷ்(43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story