தாம்பரம் சானடோரியம் ‘மெப்ஸ்’ வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு


தாம்பரம் சானடோரியம் ‘மெப்ஸ்’ வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 9:31 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‘மெப்ஸ்’ வளாகத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீரென ஆய்வு செய்தார்.

தாம்பரம்,

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டல (மெப்ஸ்) வளாகத்தில் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது ‘மெப்ஸ்’ வளாகத்தில் உள்ள தனியார் நிறுவன வளாகங்களில் திறந்தவெளி பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த டயர் மற்றும் பழைய பொருட்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்த மாவட்ட கலெக்டர் பொன்னையா, அவற்றை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனியார் நிறுவனங்களை கேட்டுக் கொண்டார்.

வருகிற 24–ந்தேதிக்குள் இந்த நிறுவனங்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க காலஅவகாசம் அளித்த மாவட்ட கலெக்டர், 25–ந்தேதி இந்த பகுதிகளில் ஆய்வு செய்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story