கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்தவர் மீது வழக்கு


கணவரை பிரிந்து வாழ்ந்த  பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 20 Oct 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையை அடுத்த கலங்கல் ஏரி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 28). இவருக்கும் கீழ்பென்னாத்தூர் பனையூரை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011-ம் ஆண்டு பிரிந்தனர்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புவனேஸ்வரிக்கு கலசப்பாக்கம் தாலுகாவை சேர்ந்த அதாஉல்லா என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். அதாஉல்லா, புவனேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புவனேஸ்வரி கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளக்கோரி அதாஉல்லாவிடம் அவர் தெரிவித்தார். “கர்ப்பத்தை கலைத்து விடு; பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறி, அதாஉல்லா புவனேஸ்வரியின் கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து புவனேஸ்வரி, அதாஉல்லாவிடம் திருமணம் செய்துகொள்ளக்கோரி கேட்டபோது, அதாஉல்லா திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து புவனேஸ்வரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியிடம் புகார் செய்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனையடுத்து அதாஉல்லா மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


Next Story