காலணி தயாரிப்பு பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


காலணி தயாரிப்பு பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெறும் காலணி தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இந்திய அரசால் சென்னையில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் தேசிய எஸ்.சி., எஸ்.டி. மையம் மற்றும் தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், காலணி வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல் குறித்த குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம், உணவு கட்டணம் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த அடிப்படை கல்வி தகுதி 10-ம் வகுப்பு முடித்தவர்கள் தங்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு போன்ற சான்றிதழ்களுடன் வருகிற 5-ந் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.cft-i-c-h-e-n-n-ai.in என்ற இணையதள முகவரியிலும், 96779 43633, 96779 43733 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை 0461-2340607 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story