சென்னை மந்தைவெளியில் கால் டாக்சி டிரைவர் வெட்டிக்கொலை
சென்னை மந்தைவெளியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அடையாறு,
சென்னை மந்தைவெளியில் உள்ள மாநகர பஸ் பணிமனை அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், அந்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்கியது. அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.
ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அந்த வாலிபரை ஓட ஓட விரட்டிச்சென்று கத்தி, வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், மயிலாப்பூர் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிபுகுமார் மற்றும் போலீசார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிவா (வயது 28) என்பதும், திருமணமாகாத அவர், கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிவா மீது கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
கொலையான சிவாவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். மந்தைவெளி பகுதியில் வசித்து வரும் தனது சித்தி லட்சுமியை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான், மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்து, பின்னர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த சிலர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடித்தால் கொலைக்கான உண்மையான காரணம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story