பாளையங்கோட்டையில் போலீசார் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி
பாளையங்கோட்டையில் போலீசார் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவை போற்றும் வகையில் நெல்லை மாநகர போலீஸ் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து இந்த போட்டி தொடங்கியது. போட்டியை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுகுணாசிங் (சட்டம்-ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் ஆயுதப்படை உதவி கமிஷனர் வடிவேலு, இன்ஸ்பெக்டர் சாது சிதம்பரம், மகேசுவரி உள்பட 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் ஐகிரவுண்டு ரவுண்டானா, போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம், கிருஷ்ணா ஆஸ்பத்திரி, சேவியர் கல்லூரி வழியாக மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் கல்லத்தியான் முதலிடத்தையும், பொன் சதீஷ் 2-வது இடத்தையும், ஜோசப் மில்டன் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் திவ்யா முதலிடத்தையும், ரம்யா 2-வது இடத்தையும், சுகன்யா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவை போற்றும் வகையில் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
Related Tags :
Next Story