பொ.மல்லாபுரம், கடத்தூர் பேரூராட்சிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி
பொ.மல்லாபுரம், கடத்தூர் பேரூராட்சிகளில் டெங்கு கொழுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் 15 வார்டுகளிலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி மற்றும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரூராட்சி 6-வது வார்டு பிள்ளையார் கோவில் தெரு, 10-வது வார்டு மஜீத் தெரு, பாரஸ்ட் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக டெங்கு கொசுப்புழு ஒழித்தல் பணி மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் ஆகிய பணிகள் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு டெங்கு கொசுப்புழு உருவாவதை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குதல், துப்புரவு பணி மேற்கொள்ளுதல், வடிகால்கள் சுத்தம் செய்தல், வீடு வீடாக குப்பை சேகரித்தல், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடத்தூர் பேரூராட்சி 1-வது வார்டு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக டெங்கு கொசுப்புழு ஒழித்தல் பணி மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் ஆகிய பணிகள் மேற்கொண்டனர். இந்த பணிகளை மலைவாழ் நல திட்ட அலுவலர் சரவணன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு டெங்கு கொசுப்புழு உருவாவதை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான டெங்கு ஒழிப்பு மண்டல அலுவலர் வில்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், மாதையன், தாசில்தார் கற்பகவடிவு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி, சுகாதார ஆய்வாளர் பாபு மற்றும் ஊராட்சி செயலர், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் தெருக்களில் தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி, தூய்மைப் படுத்தினர். மேலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story