கீழையூரில் பழுதடைந்த வெள்ளையாற்று பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கீழையூரில் பழுதடைந்த வெள்ளையாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் வெள்ளையாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக சோழவித்யாபுரம், நிர்த்தன மங்களம், சின்னதும்பூர், பெரியதும்பூர் வழியாக ஏறுஞ்சாலை வரை சாலை செல்கிறது. இந்த சாலை கிழக்கு கடற்கரை சாலைக்கு இணைப்பு சாலையாக உள்ளது. சாலையில், வெள்ளையாற்றின் குறுக்கே சுமார் 500 மீட்டர் நீலத்திற்கு பாலம் உள்ளது. தற்போது இந்த பாலம் மிகவும் பழுதடைந்தது, பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து காணப்படுகிறது. மேலும் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து கம்பிகள் மற்றும் சிமெண்டு காரைகள் வெளியே தெரியும் படி உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் பாலம் கூடுதலாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாக நாகைக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்..
தற்போது இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வெள்ளையாற்று பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, பழுதடைந்த வெள்ளையாற்று பாலத்தை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள். வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Tags :
Next Story