மாவட்ட செய்திகள்

மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம் + "||" + Arrested College student Conflicting Confessions in model girl murder

மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்

மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்
மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் உண்மையை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை,

மும்பையில் மான்ஷி தீக்சித் என்ற 20 வயது மாடல் அழகி அண்மையில் கொலை செய்யப்பட்டார். மலாடு பகுதியில் ஒரு சூட்கேசில் முகம் உள்பட உடல் முழுவதும் காயங்களுடன் படுக்கை விரிப்பால் சுருட்டப்பட்ட நிலையில் மான்ஷியின் உடல் கைப்பற்றப்பட்டது.


போலீஸ் விசாரணையில், மாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) என்பவர் கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அவரை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர் மான்ஷி தீக்சித் முதலில் செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என தனது வாக்குமூலத்தை முசாமில் சையத் மறுத்து இருக்கிறார்.

கொலை தொடர்பாக அவர் மாற்றி, மாற்றி முரண்பட்ட வாக்குமூலத்தை தெரிவித்து வருகிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

மாடல் அழகி மான்ஷி தீக்சித் கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து 6 பவுன் நகைக்காக விஷம் கொடுத்து பெண் கொலை
திருவாரூர் அருகே வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து வீட்டின் உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் விஷம் கொடுத்து 6 பவுன் நகையை திருடி சென்ற கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். விஷம் அருந்திய தம்பதியரில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2. சாந்தாகுருசில் குழந்தைகளை பார்க்க வந்த சேலம் வாலிபர் படுகொலை
சாந்தாகுருசில் தனது குழந்தைகளை பார்க்க வந்த சேலம் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மாமியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
வலங்கைமான் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி கைது திடுக்கிடும் தகவல்கள்
அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தியை போலீசார் கைது செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. பாந்திராவில் என்ஜினீயரை கொன்ற தொழில் அதிபர் கைது
பாந்திராவில் சண்டையை விலக்க முயன்ற போது, என்ஜினீயரை அடித்து கொன்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.