மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் - அசோக் சவான் குற்றச்சாட்டு
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கூட்டணி அரசு தங்களது ஆட்சி காலத்தில் கடைசி 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டி உள்ளது.
ஆனால் பா.ஜனதா கூட்டணி அரசு 4 ஆண்டுகளில் 1 கோடியே 20 லட்சம் வீடுகளை கட்டி உள்ளதாக கூறினார்.
பிரதமரின் இந்த குற்றச்சாட்டிற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பதில் அளித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பொய் பேசுவதில் யாரும் பிரதமர் மோடியுடன் போட்டி போட முடியாது. ஷீரடியில் கூட அவர் பொய் பேசியிருப்பது எங்களை போன்ற சாய்பாபா பக்தர்களுக்கு கவலை அளிக்கிறது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடியே 24 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.
2014-ம் ஆண்டு ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையின்படி 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசு 1 கோடியே 28 லட்சம் வீடுகளை கட்டி உள்ளது.
2013-ம் ஆண்டு ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. இந்த திட்டத்தின் பெயரை சர்தார் பட்டேல் நகர வளர்ச்சி திட்டம் என மாற்றி மோடி 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடு கட்டப்போவதாக கூறியுள்ளார். ஆனால் 2017-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் 1.33 லட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டுள்ளது.
பிரதமருக்கு உண்மையை பேசும் ஞானத்தை கொடு என சாய்பாபாவிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஷீரடியில் 10 பேருக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டு சாவியை கொடுக்கும் நிகழ்ச்சிக்காக ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினாா்.

Related Tags :
Next Story