தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு குடும்பத்துடன் சுற்றிபார்த்தும் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைஎன தொடர் விடுமுறையின் காரணமாக குடும்ப சகிதங்கள், நண்பர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தளத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டு களித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல்கள், மான், யானை சிலைகள் போன்றவற்றில் விளையாடியும் கை பேசி, கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் குழந்தைகளுடன் மகிழ்ச்சி பொங்க விளையாடி மகிழ்ந்தனர்.
சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சித்தன்னவாசலில் இரு வேறு மலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குகை ஓவியம், சமணர் படுக்கைகள் உள்ளன. இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள மலையில் சுனை ஒன்று உள்ளது. இதை நாவல்சுனை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. தற்சமயம் 26 ஆண்டுகளுக்கு பின்பு அந்த சுனையை சுத்தம்செய்து சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சிவலிங்கத்தை காண மலைமீது குவிந்த வண்ணம் இருந்தனர்.

Related Tags :
Next Story