பெண்கள் பாதுகாப்புக்காக புதிய இயக்கம் தொடங்கப்படும் மாதர் சங்க மாநில பொது செயலாளர் பேட்டி


பெண்கள் பாதுகாப்புக்காக புதிய இயக்கம் தொடங்கப்படும் மாதர் சங்க மாநில பொது செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 21 Oct 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு கரூரில் நேற்று நடந்தது. இதற்கு மாநில பொது செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார்.

கரூர்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு கரூரில் நேற்று நடந்தது. இதற்கு மாநில பொது செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்விக்குழு நிர்வாகி அன்வர்உசேன் பேசினார். இந்த பயிற்சி வகுப்பில் மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுகந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் பணிபுரிகின்ற இடங்களில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதை சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. உதாரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக இருக்கிற முருகன் மீது ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை. போலீஸ்துறையை சார்ந்தவர்களே விசாரணை கமிட்டியில் உள்ளனர். தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்பட வெளிநபர்களை அந்த கமிட்டியில் சேர்க்க வேண்டும். வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமானது தமிழகம் முழுவதும் பல்வேறு பெண் அமைப்புகளை இணைத்து பெண்கள் பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஒரு புதிய இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். மீ டூவில் புகார் தெரிவிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று வழிபடலாம் என்பதே மாதர் சங்கத்தின் ஒருமித்த கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story