டி.என்.பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபருக்கு அபராதம்
டி.என்.பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிதிரிந்த வாலிபருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் காவல் சுற்றில் டி.என்.பாளையம் வனத்துறையினர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஒருவர் கையில் நாட்டு துப்பாக்கியுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
வனத்துறையினரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். உடனே வனத்துறையினர் அவரை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 34) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்லால் உத்தரவின்பேரில் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து விட்டனர்.