கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

அய்யப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத், அந்தராஷ்ட்ரிய விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் முருகன், பாபு, காஞ்சனா, சத்தியா, துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் சிவபிரபுஜி பேசினார். இதில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆகமவிதிகள் படி பெண்கள் செல்ல கூடாது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யப்ப பக்தர்களை தாக்கிய கேரள போலீசாரை கண்டித்தும், இந்து கலாசாரம் மற்றும் ஆகம விதிகள் கடைபிடிக்காமல் அவமதித்த ரெஹானாவை கைது செய்ய வேண்டும். அவரை மத்திய அரசு பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story