விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: நல்லெண்ணெய், பாமாயில் விலை உயர்வு - சீனி விலை குறைந்தது
விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய், பாமாயில் விலை உயர்ந்துள்ள நிலையில் சீனி விலை குறைந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.4,200 முதல் ரூ.4,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.4,900 முதல் ரூ.6,600 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.5,100 முதல் 5,600 வரையிலும் விற்பனை ஆனது. துவரை 100 கிலோ மூடைக்கு ரூ.4,000 முதல் ரூ.4,400 வரையிலும், துவரம் பருப்பு ரூ.5,400 முதல் ரூ.6,400 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப் பயறு 100 கிலோ மூடைக்கு ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், பாசி பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.7,700 முதல் ரூ.8,700 வரையிலும் விற்பனை ஆனது.
மல்லி லயன் ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.2,400 முதல் ரூ.2,500 வரை விற்பனை ஆனது. மல்லி நாடு ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.2,500 முதல் ரூ.2,800 வரை விற்பனை ஆனது. வத்தல் குவிண்டாலுக்கு புது வத்தல் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.9,000 முதல் ரூ.10,200 வரையிலும், முண்டு வத்தல் புதியது குவிண்டாலுக்கு ரூ.10,000 வரையிலும் விலை சொல்லப்பட்டது.
விருதுநகர் எண்ணெய் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.2,080 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.1,605 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.1,750 ஆகவும் விற்பனை ஆனது. நிலக் கடலை பருப்பு 80 கிலோ மூடைக்கு ரூ.5,300 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடைக்கு ரூ.3,500 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1,400 ஆகவும் விற்பனை ஆனது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.105 விலை உயர்ந்து ரூ.1,135 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவுக்கு ரூ. 83 விலை உயர்ந்து ரூ.4,208 ஆகவும் விற்பனை ஆனது.
விருதுநகர் சீனி மார்க்கெட்டில் சீனி குவிண்டாலுக்கு ரூ.20 விலை குறைந்து ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ.4,500 ஆகவும், பொரி கடலை 55 கிலோவுக்கு ரூ.3,560 ஆகவும், பட்டாணி 100 கிலோவுக்கு ரூ.5,000 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.5,300 முதல் ரூ.8,200 வரையிலும், மசூர் பருப்பு ரூ.5,850 ஆகவும், ரவை 25 கிலோவுக்கு ரூ.1,010 ஆகவும், மைதா முதல் ரகம் 90 கிலோ ரூ.3,340 ஆகவும், 2-வது ரகம் ரூ.2,640 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டா 50 கிலோ ரூ.1,410 ஆகவும் விற்பனை ஆனது. கோதுமை தவிடு 35 கிலோ ரூ.740 ஆகவும் விற்பனை ஆனது.
விருதுநகர் காபி மார்க்கெட்டில் காபி பிளாண்டேசன் பிபி ரகம் 50 கிலோ ரூ.10,500 ஆகவும், ஏ ரகம் ரூ.10,900 ஆகவும், சி ரகம் ரூ.9,000 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.7,600 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.6,750 ஆகவும் விற்பனையானது.
Related Tags :
Next Story