மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு


மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 7:45 PM IST)
t-max-icont-min-icon

மருதுபாண்டியர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மன்னர்கள் சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வந் தனர். மருதுபாண்டியர்களின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24–ந்தேதி மருதுபாண்டியர்கள் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது.

திருப்பத்தூரில் உள்ள மணி மண்டபத்தில் அரசு சார்பில் நாளை(புதன்கிழமை) அரசு விழா நடைபெற உள்ளது. இதேபோல் வருகிற 27–ந் தேதி காளையார்கோவில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செ லுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதையடுத்து திருப்பத்தூரில் நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையி ட்டு ஆய்வு செய்தார். மணிமண்டபத்தில் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களிடம் விழா குறித்து கேட்டறிந்தார். இதுதவிர விழாவின்போது போக்குவரத்து வழித் தடங்கள், பாதுகாப்புப் பணிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கான நேரம் ஒ துக்கீடு குறித்து கேட்டறிந்தார்.

தென் மண்டல ஐ.ஜி. ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், தி ருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, கீதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து திரு ப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் அவரது நினைவு ஸ்தூபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story