ஆரல்வாய்மொழி அருகே சிமெண்டு லாரி கால்வாயில் கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
நெல்லையில் இருந்து சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி திருவனந்தபுரத்துக்கு சென்றது.
ஆரல்வாய்மொழி,
நெல்லையில் இருந்து சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி திருவனந்தபுரத்துக்கு சென்றது. அந்த லாரியை கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த சோபியன் (வயது 26) ஓட்டி வந்தார். லாரி நேற்று காலை ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் பகுதியில் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் ஓரமாக சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவான பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக கால்வாயில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சோபியன் படுகாயம் அடைந்தார்.
உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் டிரைவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story