உளுந்தூர்பேட்டை அருகே: லாரி மீது கார் மோதல்; என்ஜினீயர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே: லாரி மீது கார் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2018 3:15 AM IST (Updated: 22 Oct 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசூர், 

கரூர் மாவட்டம் பரமசிவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துக்கதிரவன்(வயது 26), என்ஜினீயர். இவர் தனது நண்பர்கள் கவின், ரகு, கவுதமன், மனோஜ்குமார் ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை மனோஜ்குமார் ஓட்டினார். இவர்களது கார் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி முத்துக்கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜ்குமார் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான முத்துக்கதிரவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story